Home இலங்கை குற்றம் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 405 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 405 பேர் கைது

0

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட
சுற்றிவளைப்பின் போது 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (8) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது

அதன்படி, 99 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன், 221 பேர் ஐஸ் போதைப்பொருளுடன், 85
பேர் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/405-people-arrested-in-special-island-wide-raids-1746788430

NO COMMENTS

Exit mobile version