Home இலங்கை சமூகம் தபால் மூல வாக்காளர்களுக்காக அறிமுகமான ஈ சேவை

தபால் மூல வாக்காளர்களுக்காக அறிமுகமான ஈ சேவை

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ‘ஈ’ சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

அதன்படி, தபால் மூல வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் இடம் மற்றும் சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காண உதவும் வகையில் ‘ஈ’ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகளையும், அவர்களின் சின்னங்களையும் அடையாளம் காண எளிதாக்கியுள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு 

அத்துடன் eservices.elections.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தேர்தல் ‘ஈ’ சேவையை அணுக முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதில் அரச அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு தகவல்களுக்கான இணைப்பை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மே மாதம் 06ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 24,25,28,29 ஆகிய நாட்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/VsKYjcmhnWQ

NO COMMENTS

Exit mobile version