Home இலங்கை சமூகம் தனிப்பட்ட தகராறு : தென்னிலங்கையில் ஒருவர் அடித்துக் கொலை

தனிப்பட்ட தகராறு : தென்னிலங்கையில் ஒருவர் அடித்துக் கொலை

0

திவுலப்பிட்டிய (Divulapitiya), துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கத்தி மற்றும் பொல்லுகளால் தாக்கி அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் மடம்பலே பகுதியைச் சேர்ந்த 46 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலப்பிட்டிய காவல்துறையினர் குழுவொன்றை நியமித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

NO COMMENTS

Exit mobile version