Home முக்கியச் செய்திகள் நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட குழு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட குழு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

யாழ் (Jaffna) நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட ஐவரை தொடர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஐவர் அடங்கிய குழுவொன்று நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதத்தால்
தாக்குதல் நடத்தியது.

வைத்தியசாலையில் அனுமதி

குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றிருந்தது.

இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் இருவர்
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடுமையாக எச்சரிக்கை

இதையடுத்து, தாக்குதலை நடாத்திய ஐவரையும் நல்லூரடியில் கடமையில் இருந்த
காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்பு, கைது செய்யப்பட்ட ஐவரையும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், நீதிவான் அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் எதிர்வரும் 26
ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

NO COMMENTS

Exit mobile version