Home இலங்கை அரசியல் தென்பகுதியில் மகிந்த – ரணிலின் ஆதிக்கம்: வடக்கில் அநுர தரப்பு எடுத்துரைப்பு

தென்பகுதியில் மகிந்த – ரணிலின் ஆதிக்கம்: வடக்கில் அநுர தரப்பு எடுத்துரைப்பு

0

மகிந்த ராஜபக்ச, ரணில், எதிர்கட்சிகள், சஜித், நாமல் போன்றவர்கள் தென்பகுதியில் பாதாள உலக குழுக்களை உருவாக்கி நாட்டுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தத்தின் பின்னர் மகிந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாதாள உலக குழுக்களை உருவாக்கி தமிழ் பிரதேசங்களில் ஒரு குழுவும் கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வேறு ஒரு குழுவாக பிரதேச செயலகம் போன்று உருவாக்கி காவல்துறை அதிகாரிகளையும் ஒரு சில அரச அதிகாரிகளையும் இணைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வன்முறைகளுக்கான காரணம்

இவ்வாறான பிரச்சினைகளை எமது அரசாங்கம் இனங்கண்ட பின், குறித்த முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதை நிறுத்தி விட்டோம்.

முன்னாள் அரசாங்கம் பாதாள உலக குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் அவர்கள் பயமில்லாமல் இயங்கினார்கள்.

பாதுகாப்பு வழங்குவதை நிறுத்திய பின்னர், இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு தற்போது துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு, அடிதடி போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எங்களுடைய அரசாங்கம் இந்த பிரச்சினைகள் எங்கு இடம் பெறுகிறது என்பதை இனங்கண்டு பாதாள உலக குழுக்களுக்கு தண்டனை வழங்கிவருகிறது.”

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

NO COMMENTS

Exit mobile version