Home இலங்கை அரசியல் இனவாதத்தை தூண்டும் சஜித்தை ஜனாதிபதியாக்க கங்கணம் கட்டும் தரப்பினர்!

இனவாதத்தை தூண்டும் சஜித்தை ஜனாதிபதியாக்க கங்கணம் கட்டும் தரப்பினர்!

0

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை தேசிய பிரச்சினை என சொன்ன சஜீத் பிரேமதாசவை தான் எங்களில் சிலர்
ஜனாதிபதியாக்க மூன்று காலில் நின்றார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(25.11.2025) கருத்து தெரிவித்த அவர், 

“முன்னதாக விகாரையை சேர்ந்தவர்கள் ஹோட்டல் அமைக்கவும் அதில் வருமானமீட்டவும்
பிக்கும் அவருடன் இணைந்த அணியினரும் நினைத்திருப்பார்கள்.

சட்ட நடவடிக்கை 

சட்ட நடவடிக்கை
வந்ததும் உணர்வுகளை தூண்ட வேண்டியது புத்தர் சிலை தானே .

தற்போது சஜீத் பிரேமதாச உள்ளத்தில் என்ன இருக்கு என்பதும்
உண்மை முகமும் வெளிவந்துள்ளது. சஜீத் மட்டுமல்ல அவருக்கு பின்னால் வால்
பிடித்தவர்களும் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும். இது தான் வரலாறு.

சட்டத்துக்கு முரணாக மாநகர சபையின் சட்டங்களை மீறி பலாத்கரமாக மீறி எதை
செய்தாலும் அதனை தடுக்க வேண்டும்.

சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும். பிக்குகளாக
இருந்தாலும் சிங்கள மக்களாக இருந்தாலும் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அது
தான் மிக முக்கியம்.

இது ஒரு ஆக்கிரமிப்பு என்பதை வெளியில் குரல் கொடுத்தவர்கள்
சம்பவ இடத்தில் குரல் கொடுத்தவற்றை வைத்து பார்க்கின்ற போது புரிகிறது.

இப்படி
சொல்லிய
சொல்லியே ஒவ்வொரு இடத்திலும் புத்தர் சிலையை வைத்து புத்தர் அடையாளம் என்று
கூறி பிறகு அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறுவார்கள்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version