Home இலங்கை சமூகம் வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48,577 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 48,577 பேர் பாதிப்பு

0

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வடக்கு மாகாணத்தில்15, 427
குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2,040 குடும்பங்களைச் சேர்ந்த 7,436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் பலரை இடைத்தங்கல்
முகாம்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 861
அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர்
இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். 

ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் 

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர்
பாதிப்படைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இடைத்தங்கல்
முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

அதுமாத்திரமன்றி, மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910
பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர்
இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் 5 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன.

அதேநேரம், வவுனியா மாவட்டத்தில் 87 குடும்பங்களைச் சேர்ந்த 324 பேர்
பாதிப்படைந்துள்ளனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version