முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தரமற்ற மருந்து இறக்குமதி செய்தததாக கூறப்படும் விடயம் தொடர்பில் அக்காலப்பகுதயில் இருந்த அமைச்சர் என்ற ரீதியில் தமக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குற்றபுலனாய்வு விசாரணைக்கு சென்று திரும்பும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கோவிட் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாட்டின் போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், மருந்துகளின் தேவை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் படி, மருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும், குறித்த தீர்மானம் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து செயற்பட்டிருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,