நடப்பு ஆண்டின் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாடுகள்
அதே போன்று கடந்த எழு மாதங்களுக்குள் 3 ஆயிரத்து 937 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு 72 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் மூலம் 49 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
