Home இலங்கை அரசியல் 120 ரூபாவால் குறைக்கப்பட்ட டீசலின் விலை! சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் கருத்து

120 ரூபாவால் குறைக்கப்பட்ட டீசலின் விலை! சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் கருத்து

0

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விவசாய பிரதி நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்த விடயம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. 

தற்போதைய அரசாங்கம் பெறுப்பேற்றதில் இருந்து இதுவரை காலமும் எரிபொருள் விலை குறைப்பு படி ஒரு லிட்டர் டீசலின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்தார். 

எனினும் இந்த விபரம் முற்றிலும் தவறானதாகும். அதன்படி அமைச்சர் கூறிய கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது. “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்ற போது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.363 ஆக இருந்தது. 

லிட்டர் டீசலின் விலை

தற்போதைய விலை குறைப்புடன், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.283 ஆகும். அதன்படி, அரசாங்கம் பொறுப்பேற்ற போது இருந்த விலையுடன் ஒப்பிடும்போது இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.120 குறைந்துள்ளது.

(அவரது கூற்றுப்படி, 363-283=120) மண்ணெண்ணெய் உள்ளிட்ட பிற எரிபொருட்களின் விலைகளும் இதேபோல் குறைந்துள்ளது” என கூறியிருந்தார். இந்த விடயம் தற்போது பேசு பொருளுக்கு உள்ளாகியுள்ளது.

தற்போதைய அமைச்சரவையில் கடந்த காலங்களில் குறிப்பிடப்படும் தரவுகளில் அனேகமானவை குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. 

முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள்

முன்னதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ரோஹித ராஜபக்சவின் ரொக்கட் விவகாரம் தொடர்பாக முன்வைத்த இவ்வாறான கணக்கு விபரங்கள் கூட பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

அத்தோடு, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, வெளியிட்ட கருத்தை அதே தொலைக்காட்சி அலைவரிசையின் இன்னொரு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மறுத்திருந்தார்.

இவ்வாறு தற்போதைய அரசாங்கத்தின் முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் இன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த பின்னணியில் தற்போது நாட்டின் முக்கியமான எரிபொருளின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிடும் போது சரியான விடயங்களை முன்வைப்பது அவர்களின் கடமையல்லவா?

NO COMMENTS

Exit mobile version