Home இலங்கை கல்வி புலமை பரிசில் பரீட்சையின் நீதிமன்ற தீர்ப்பு : பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சையின் நீதிமன்ற தீர்ப்பு : பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (31) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர் நீதிமன்ற தீர்ப்பு இன்று எனக்கு கிடைத்தது, 68 பக்க தீர்ப்பு, மிகவும் பொருத்தமான முடிவை எடுத்து அதை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான தெரிவு

இதனை ஆய்வு செய்து வருகிறோம், எது பொருத்தமான தெரிவு என்று ஒரேயடியாக சொல்ல முடியாது அது தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும்.

வழக்கமாக, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வழங்குவதற்கு சுமார் 40 நாட்கள் ஆகும் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்துபுலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் முன்னதாகவே வெளியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் இருந்து பொருத்தமான பரிந்துரையை தெரிவு செய்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமர்வு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version