கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட ஐம்பது மதுபான நிலையங்களுக்கான உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, அவை மீண்டும் வழங்கப்படுவதற்கு அல்லது ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தலை முன்னிட்டு அரசியல் தொடர்புகள் மூலம் பல்வேறு நபர்களுக்கு 50 மதுபான நிலைய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மதுக்கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
மதுபான நிலைய உரிமங்களைப் பெற்ற பலர் அவற்றை ரத்து செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் முடிவெடுப்பதற்கு முன் அவற்றை ஆய்வு செய்யும் என்று அதிகாரி கூறினார்.
மதுபான நிலைய உரிமம் பெற விரும்புவோருக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றார். மதுக்கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அவை பரிசீலிக்கப்படும் என்றார்.
பலரின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்
புதிய மதுபான நிலைய உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் குடியிருப்பாளர்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
“சுற்றுலா வலயங்கள் இத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு இன்றியமையாதவை என்பதால் நாங்கள் அவற்றுக்கு முன்னுரிமை அளிப்போம். தற்போதுள்ள மதுக்கடைகளை முறையாக அகற்றும் வகையில் ஆய்வு நடத்துவோம்,” என்றார்.