2015 ஆம் ஆண்டு கொழும்பில்(colombo) நடைபெற்ற வெசாக் பண்டிகையின் போது 11 வயது சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 50 வயதான ஒரு பிள்ளையின் தந்தைக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(25) தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.200,000. மற்றும்10,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்டஈடு செலுத்தத் தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறை
சந்தேகநபர் அபராதம் மற்றும் நட்டஈடு செலுத்தத் தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது பெற்றோருடன் கொழும்பில் உள்ள வெசாக் வலயத்திற்குச் சென்றிருந்த போது பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபரால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டார்.
சிறுமி வன்புணர்வு
வெசாக் விளக்கு தயாரிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்று, அங்கு அவர் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.