Home முக்கியச் செய்திகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இடமாற்றமின்றி சேவையாற்றும் ஆசிரியர்கள் : வெளியான தகவல்

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இடமாற்றமின்றி சேவையாற்றும் ஆசிரியர்கள் : வெளியான தகவல்

0

முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்தில் மாறி மாறி 20 கிலோ மீற்றர் தூரத்திற்குள் தொடர்ச்சியாக
சேவையாற்றி வரும் சுமார் 500க்கு மேற்பட்ட ஆசிரியர்களால் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் இருந்து
அங்கு சேவைக்குச்செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்
கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தில் இருந்து
வெளிமாவட்டங்களுக்கு பல வருடங்களாக இடமாற்றம் இன்றி சென்றுவரும் ஆசிரியர்களால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த விபரம்
வெளியாகி உள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்
வழங்கப்பட்ட திகதியில் 66 பாடசாலைகளில் 512 ஆசிரியர்கள் முல்லைத்தீவு
வலயத்தின் 20 கிலோ மீற்றருக்கு உள்ளேயே மாறி மாறி சேவையில் உள்ளமை வெளிச்சத்துக்கு
வந்துள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சு

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்ட சேவைக்கு முல்லைத்தீவிற்கு செல்லும் ஆசிரியர்கள் சுமார் 150 கிலோ மீற்றர் வரை பிரயாணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய
நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

உதாரணமாக விசுவமடு, புதுக்குடியிருப்பு வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும்
ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி அப்பிரதேசங்களை சேர்ந்த ஆசிரியர்களை
முல்லைத்தீவு நகருக்கு அப்பால் உள்ள பாடசாலைகளுக்கு பரம்பல் செய்வதன் மூலம்
ஆசிரியர்களின் பிரயாண சுமையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பிரதேச ஆசிரியர்களின் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு
காரணமாக 20 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பாடசாலைகளில் பணிக்கு அனுமதித்து யாழில் இருந்து
முல்லைத்தீவின்
பிரதேச பெயர்கள் கூட அறியாத ஆசிரியர்கள் தூர பிரதேசங்களில்
பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு (Ministry of education) கவனம் செலுத்தி வெளிமாவட்டம்
செல்லாது ஒரே மாவட்டத்தில் பல வருடங்களாக தங்கியிருப்போரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version