Home இலங்கை சமூகம் கொழும்பில் அதிகரித்து வரும் குப்பைகள்! நாளாந்தம் 500 டொன் குப்பை சேகரிப்பு

கொழும்பில் அதிகரித்து வரும் குப்பைகள்! நாளாந்தம் 500 டொன் குப்பை சேகரிப்பு

0

கொழும்பு(Colombo) மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 500 டொன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தற்போதைய பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 600 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக மாநகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

500 டொன் குப்பை 

பண்டிகைக் காலங்களில் நகரில் குப்பைகள் சேகரிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி இரவு, காலி முகத்திடல் மைதானத்தில் ஒன்று கூடுபவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளை அகற்ற சுமார் 150 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version