Home முக்கியச் செய்திகள் ரஷ்ய இராணுவத்தில் 59 இலங்கையர்கள் பலி : சிறீதரனுக்கு அரச தரப்பு பதில்

ரஷ்ய இராணுவத்தில் 59 இலங்கையர்கள் பலி : சிறீதரனுக்கு அரச தரப்பு பதில்

0

ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07.02.2025) நாடாளுமன்றத்தில்  இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள அவர்களில் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/0E35VGD3R14

NO COMMENTS

Exit mobile version