உடுத்துறை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்
ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று (25.11.2025) மாவீர் வாரத்தின் ஐந்தாவது நாள்
நினைவஞ்சலி இன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய மாவீரர் வார ஐந்தாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின்
பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி
செலுத்தியுள்ளனர்.
செய்தி – எரிமலை
நாகர்கோவில் குருதிக்கொடை
ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு
இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த
தான நிகழ்வு இன்றையதினம் நாகர்கோவில் குரு குலம் சன சமூக நிலையத்தில்
இடம்பெற்றுள்ளது.
இந்த குருதி நன்கொடை நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்
செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் குருதித் தான நிகழ்வு
நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பங்குகொண்ட குருதி நன்கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செய்தி – எரிமலை
அமைதியான சூழல்
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையில், மாவீரர்களின் நினைவினை போற்றும்
நிகழ்வு இன்று காலை அமைதியான சூழலில் இடம்பெற்றது.
சபையின் உதவிசாளர் தயாபரன் தலைமையிலான இந்த நினைவஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து
கொண்டு தங்கள் மரியாதைகளை செலுத்தினர். பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும்
ஒருங்கிணைந்த வகையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
செய்தி – தீபன்
