சில்க் ஸ்மிதா
தென்னிந்திய சினிமாவை ஒரு காலத்தில் தனது அழகால் கட்டிப்போட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா.
கிளாமர் நடனம், நடிப்பு மூலம் உச்சம் தொட்டவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை.
ஒப்பனைக் கலைஞராக தனது சினி பயணத்தை தொடங்கியவர் வினுசக்கரவர்த்தி இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
செம கோபத்தில் மீனா வீட்டிற்கு சென்று ராஜி செய்த காரியம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
இப்படம் மூலம் தொடங்கிய அவரது பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என சுமார் 5 மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.
இவரது கால்ஷீட்டிற்காகவே படப்பிடிப்புகளை தள்ளி வைத்து காத்துக் கொண்டிருந்த இயக்குனர்கள் பலர் இருந்தனர்.
வசீகர காந்த பார்வை, அழகு, நடிப்பு திறமை என 80களில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
ஆனந்தராஜ்
புகழின் உச்சத்தில் இருந்து சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் இப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.
சில்க் ஸ்மிதா குறித்து பிரபல நடிகர் ஆனந்தராஜ் ஒரு பேட்டியில், சில்க் ஸ்மிதா எனக்கு நல்ல தோழி, அவங்க என்கூட நிறைய படம் நடித்திருக்கிறார்கள்.
அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன் எனக்கும் அவங்களுக்கும் ஒரு ஐட்டம் சாங் படப்பிடிப்பு இருந்தது. அடுத்த நாள் அவர் இறந்துவிட்டார் என்றதும் ஷாக் ஆகிட்டேன், அவரின் இந்த முடிவுக்கு காரணம் மன அழுத்தம் தான்.
அவங்களுக்குள்ள அவ்ளோ வலி இருந்தது, அவங்க இப்போது இருந்து இருந்தா இன்னைக்கு வரை நடித்துக் கொண்டு இருந்திருப்பார்கள் என கூறியுள்ளார்.
