Home இலங்கை அரசியல் அரகலயவுக்கு பின்னர் அரசியலுக்கு விடைகொடுத்த 6,000 அரசியல்வாதிகள்

அரகலயவுக்கு பின்னர் அரசியலுக்கு விடைகொடுத்த 6,000 அரசியல்வாதிகள்

0

2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிரான அரகலய போராட்டத்தின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 6,000 அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் பெப்ரல்(Faferal) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,

“போராட்டத்தின் பின்னர் பல அரசியல்வாதிகள் நம்பிக்கை இழந்து அரசியலில் இருந்து விலகியுள்ளனர்.

30 அரசியல் கட்சிகள்

அத்துடன், பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியலுடன் தொடர்புடைய மேலும் 2,000 பேர் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மேலும், ஏனைய கட்சிகளை உருவாக்குதல், ஏனைய கட்சிகளுடன் இணைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் சுமார் 30 அரசியல் கட்சிகள் செயலிழந்துள்ளன.

இந்நிலையில், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு கோரப்பட்ட நிலையில் 80,000க்கும் அதிகமான வேட்பாளர்கள் தோற்றியிருந்த அதிக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version