Home இலங்கை அரசியல் கஜேந்திரன் தரப்புக்கு 6 கோடி நிதி! முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு

கஜேந்திரன் தரப்புக்கு 6 கோடி நிதி! முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு

0

எனக்கும் எனது தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கும் ரணில் விக்ரமசிங்கவினுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் 6 கோடி கிடைத்திருப்பதாக பத்திரிகையிலே ஒரு போலியான செய்தி வெளியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (23.07.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், எங்களுக்கு அவ்வாறான விசேட நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

நாங்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்கான விண்ணப்பங்களை மாத்திரம் தான் செய்திருந்தோம்.

அதற்கான அங்கீகாரம் பங்குனி, சித்திரை மாதங்களில் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் காலம் தாழ்த்தப்பட்டு, இப்போது தான் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

அரச புலனாய்வு பிரிவிடம் சம்பளம் பெறுகின்ற ஊடகவியலாளர் என்ற போர்வையிலே செயல்படுகிற ஒரு சிலர் அவ்வாறான பொய்ச் செய்திகளை வெளியிட்டுகின்றனர் அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்,  

NO COMMENTS

Exit mobile version