Home முக்கியச் செய்திகள் 10 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற கொலை : ஆறுபேருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

10 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற கொலை : ஆறுபேருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

0

கிராம மக்களைத் தாக்கி பாரவூர்தியால் நசுக்கி கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை நீதவான் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 15, 2015 அன்று நடந்ததாகக் கூறப்படும் ஒரு கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேற்படி தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த 6 பேரும் கெஹெலுல்ல பகுதியில் உள்ள கடுபஹார கிராமத்தில் ஒரு பாரவூர்தியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

 கிராம மக்களைத் தாக்கி பாரவூர்தியால் நசுக்கி கொலை

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டு கிராம மக்களைத் தாக்கி பாரவூர்தியால் நசுக்கி கொலை செய்துள்ளனர்.

அதன்படி, அந்த சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version