Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்கள் உட்பட ஆறு பேர் அதிரடியாக கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்கள் உட்பட ஆறு பேர் அதிரடியாக கைது

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை 6 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் Green Lane வழியாக 12.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற சந்தேக நபர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் ஆண்கள் எனவும் மீதமுள்ள இருவர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 2 பெண்களில் ஒருவர் வெளிநாட்டுப் பெண்ணாகும்.

அதிகாரிகளால் கைது

சந்தேகநபர்கள் அனைவரும் டுபாய், ஷார்ஜா மற்றும் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்களாகும்.

84,000 சிகரெட்டுகள் கொண்ட இந்த வெளிநாட்டு தயாரிப்பு மென்செஸ்டர் சிகரெட்டுகளின் 420 அட்டைப்பெட்டிகளை தங்கள் பொதிகளில் எடுத்துச் சென்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக சுங்க அதிகாரிகளால் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version