பெரும்பாலும் பலருக்கு தூங்கும் பொழுது கனவுகள் அதிகம் வரும், அவ்வாறு கனவில் சந்தோஷமான தருணங்கள், சோகமான விடயங்கள் வரலாம். கனவுகள் சொல்லும் பலன்கள் ஏராளமானவை.
குறிப்பாக, ‘பாம்புகள் கனவில் வந்தால் மிகப்பெரும் கஷ்டம் நம்மைச் சூழும் என்றும், கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்மைப் பீடித்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும்’ என்றும் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த பதிவில் முதலில் நமது கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
மிகப்பெரும் கஷ்டம் சூழும்
பாம்பு கனவில் வந்தால் பல அர்த்தங்கள் உள்ளது.
ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
கடவுளை தியானித்து பிறகு நித்திரை
காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கும்.
பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.
நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
