Home இலங்கை சமூகம் ஐ.ஜி.பி தென்னகோனை தேடும் வேட்டையில் 6 காவல்துறை குழுக்கள் களத்தில்!

ஐ.ஜி.பி தென்னகோனை தேடும் வேட்டையில் 6 காவல்துறை குழுக்கள் களத்தில்!

0

முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) கைது செய்வதற்காக 6 காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala)  தெரிவித்துள்ளார்.

மேலும், தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாவுத் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கடந்த 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது

காவல்துறை குழுக்கள்

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை  கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியது.

குறித்த நீதிமன்ற உத்தரவின் பின்னர், தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதையடுத்து அவரை கைது செய்ய அண்மைய நாட்களாக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்த போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த நிலையில்,முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 காவல்துறை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/YXBNEGAEkFU

NO COMMENTS

Exit mobile version