Home இலங்கை பொருளாதாரம் அரை மில்லியன் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி

அரை மில்லியன் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி

0

இலங்கை மீது அமெரிக்கா மீண்டும் இடைநிறுத்தப்பட்ட வரியை விதித்தால், அது நாட்டின் ஆடைத் துறையில் பணிபுரியும் சுமார் அரை மில்லியன் பணியாளர்களை பாதிக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் சுரங்க சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பணியாளர்கள் வேலை இழந்தால், சமூக வளர்ச்சியும் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

44 சதவீத வரி என்பது மிக அதிகமாக உணரக்கூடிய வரியாக காணப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆடை ஏற்றுமதி

இலங்கையில் இருந்து அதிகளவில் ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவை மிகவும் தரம் வாய்ந்த ஆடைகளாகும்.

இதனால் இலங்கையின் ஆடை தொழிற்துறைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

கடன் செலுத்தி வரும் இலங்கைக்கு இது பொருளாதாரத்தின் மிகப்பெரிய தாக்குதலாக காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version