Home இலங்கை பொருளாதாரம் மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

நாட்டில் வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வங்கி கணக்கு

மேலும் தெரிவிக்கையில், சுமார் மூன்று கோடியே நாற்பது இலட்சம் வங்கி கணக்குகளில் ஐயாயிரம் ரூபாவிலும் குறைந்த தொகையே வைப்பு நிலுவையாக காணப்படுகின்றது.

நாட்டின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இருபது இலட்சம் என்ற போதிலும் வங்கிகளின் வைப்புத் தொகை ஐந்து கோடியே எழுபது லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடன் தொகை

வங்கிகளில் அறவிட முடியாக் கடன் தொகை 4 முதல் 5 வீதமாக காணப்படும் என்ற போதிலும் தற்பொழுது அந்த தொகை 13 வீதமாக அதிகரித்துள்ளது.

கடன் செலுத்துகையை மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் சொத்துக்களை கைப்பற்றும் சட்டமான பாராடே சட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், வங்கிகள் நீதிமன்றின் உதவியுடன் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவின் ஆட்சியில் இடம்பெற்ற கொலைகளை பட்டியலிடும் சாள்ஸ் எம்.பி

NO COMMENTS

Exit mobile version