Home உலகம் வெளிநாடொன்றில் மர்ம கும்பல் நடாத்திய துப்பாக்கி சூடு: 7 பேர் பலி

வெளிநாடொன்றில் மர்ம கும்பல் நடாத்திய துப்பாக்கி சூடு: 7 பேர் பலி

0

பிரேசிலில் (Brazil) மர்ம கும்பலொன்றினால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவமானது சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே நேற்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர்  படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/7-killed-in-brazil-nightclub-shooting-1718996467

NO COMMENTS

Exit mobile version