Home இலங்கை குற்றம் வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை

0

 வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை
இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் 7 கைதிகள் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக்
தினத்தை முன்னிட்டு இன்று (12.05) விடுதலை செய்யப்பட்டனர்.

ஏழு பேர் விடுதலை

இதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலும் சிறு குற்றங்களோடு
சம்பந்தப்பட்டவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யூ.எச். மதுசங்க தலைமையில் கைதிகள்
விடுவிப்பு இடம்பெற்றிருந்தது.

Source: https://tamilwin.com/article/7-prisoners-freed-in-vavuniya-jail-1747040090

NO COMMENTS

Exit mobile version