Home சினிமா எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு உண்டு ஆனால்.. ஓப்பனாக சொன்ன ரஜினிகாந்த்

எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு உண்டு ஆனால்.. ஓப்பனாக சொன்ன ரஜினிகாந்த்

0

 கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜீன்ஸ் படப்பிடிப்பு தள போட்டோஸ்.. இதுவரை பலரும் பார்த்திராத ஸ்டில்ஸ்

ரஜினிகாந்த் ஓபன் டாக் 

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது வெற்றி குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு. அதுதான் இறைவனின் குரல். இறைவனின் குரலையும் உங்கள் குரலையும் பிரித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கவுரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை. எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து ரீதியாக முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் மனசில் பட்டதை சொல்லிட்டு சென்றுவிடுவார்.

மனதில் பட்டதை சொல்றவங்களை நம்பிடலாம், ஆனால், உள்ளே ஒன்று வைத்து கொண்டு வெளியில் ஒன்று பேசுபவர்களை நம்ப முடியாது”
என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version