Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் (Sri Lanka) பதிவு செய்யப்படாத சுமார் 700 வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (Department of Motor Traffic) தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டிலுள்ள 1500 சாரதி பயிற்சிப்பள்ளிகளில் 800 ஓட்டுநர் பள்ளிகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாகன ஓட்டுநர் பள்ளி உரிமம் வழங்குவது மற்றும் ஓட்டுநர் பள்ளிகளின் பதிவு இடைநிறுத்தப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
எவ்வாறாயினும், திணைக்களம் இப்போது இந்த இரண்டு பதிவு செயன்முறையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அத்துடன், அனைத்து வாகன ஓட்டுநர் பள்ளிகளும் பதிவு செய்வதை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.