Home இலங்கை குற்றம் பாலாவியில் கைப்பற்றப்பட்ட 75 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள்

பாலாவியில் கைப்பற்றப்பட்ட 75 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள்

0

புத்தளம் (Puttalam) – பாலாவி பகுதியில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள்
கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக கடற்படையினர்
தெரிவித்துள்ளனர்.

பீடி இலைகள் லொறியில் கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக்
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து இன்று அதிகாலை குறிப்பிட்ட லொறியை முற்றுகையிட்டபோது லொறியை நிறுத்திவிட்டு சந்தேக நபர்கள்
தப்பிச்சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த லொறியை சோதனையிட்டபோது சுமார் 60 மூடைகளில் 1535 கிலோகிராம்
பீடி இலைகள் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை 

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதி ஆனவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகள் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து
கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர்
தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி
ஆகியவை புத்தளம் கலால் வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் கலால் வரித் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Source: https://tamilwin.com/article/75-lakh-worth-of-beedi-leaves-seized-in-palavi-1729685381

NO COMMENTS

Exit mobile version