அரசியல் ரீதியாக தீவிரமாகச் செயல்படும் 76 குழுக்கள் புதிய அரசியல் கட்சிப் பதிவுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வது தொடர்பான நேர்காணல்கள் தற்போது தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குழுக்கள் ஆண்டுதோறும் நேர்காணல்களுக்கு அழைக்கப்படுகின்றன.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்
இதற்காக அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் மேல் மாகாணத்திலிருந்து பெறப்பட்டுள்ள அதே நேரத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழு வலைத்தளத்தின்படி, 16 ஆம் திகதி நிலவரப்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 83 ஆகும்.
[QRYAKYG
