Home இலங்கை சமூகம் யாழில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார்

யாழில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார்

0

யாழில் கடந்த 3 நாட்களில் போதைப்பொருள்களை உடைமையில் வைத்திருந்த
குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ். நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின் போது இந்த சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர். 

போதைப்பொருள் கைப்பற்றல் 

160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்களும், போதை மாத்திரை,
ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version