Home இலங்கை அரசியல் அரசாங்கத்திற்கு ஆதரவான அமைச்சர்கள் பலர் நாட்டை விட்டு அவசரமாக வெளியேற திட்டம்

அரசாங்கத்திற்கு ஆதரவான அமைச்சர்கள் பலர் நாட்டை விட்டு அவசரமாக வெளியேற திட்டம்

0

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய 80 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு விசா பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் பொய்யானது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (11ஆம் திகதி) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை எனவும், தமக்கு எந்தவொரு நாட்டிலும் வாழ்வதற்கு விசேட விசா உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார்

10 ஆண்டுகளாக “சில அமைச்சர்கள் விசா எடுத்தார்களா என்று தெரியவில்லை.ஆனால் நான் அப்படி விசா எடுக்கவில்லை.அப்படி யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார்.நாம் நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் தலைவருக்கு ஆதரவளிப்பது இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version