Home இலங்கை குற்றம் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் கொடுமை செய்த 81வயது பிக்கு கைது

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் கொடுமை செய்த 81வயது பிக்கு கைது

0

காலி ஹபராதுவ பௌத்த கோயில் ஒன்றின் தலைமை பிக்கு, பாலியல் வன்கொடுமை தொடர்பில்
உனவட்டுன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தை சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த
குற்றச்சாட்டிலேயே 81 வயதான இந்த பௌத்த துறவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து பெண் 

குறித்த கோயிலில் தலைமை மதகுருவாக இருக்கும் பிக்கு, 41 வயதான
நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளார்.

பின்னர் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, பாதிக்கப்பட்ட
நியூஸிலாந்து பெண் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version