Home முக்கியச் செய்திகள் தாதியரின் ஓய்வு வயது வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தாதியரின் ஓய்வு வயது வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது

குறித்த உத்தரவானது நேற்று (18.07.2025) உயர் நீதிமன்றத்தால்
பிறப்பிக்கப்பட்டுள்ளது,

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் மேன்
முறையீட்டு நீதிமன்றத்துக்கு மற்றுமோர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இடைக்காலத் தடை உத்தரவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை
உத்தரவு சட்டத்துக்கு முரணானது என்றும் அது செல்லாது எனவும் கூறி
சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த பின்னர்
உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய 3
நீதியரசர்கள் கொண்ட ஆயமே இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version