Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான வாகனம்

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான வாகனம்

0

மஸ்கெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், சுமார் 83 இலட்சம் பெறுமதியான வான் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கஹவத்த காவல்துறை பிரிவில் ஓபேவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஓபேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கொள்ளையிடப்பட்ட வான் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் மஸ்கெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/83-lakhs-rs-worth-van-stolen-accused-arrested-1731916878?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version