Home முக்கியச் செய்திகள் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(18.11.2024) விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்ட நிலையில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலை நீடிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, லொஹான் ரத்வத்தவை டிசம்பர் 02ஆம் திகதி வரையிலும், அவரது மனைவியை நவம்பர் 22ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை

மிரிஹான (Mirihana) பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரத்வத்தே மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் காரை இல்லத்திற்குக் கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டதோடு, அவரது மனைவியும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து, தம்பதியினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். 

NO COMMENTS

Exit mobile version