Home முக்கியச் செய்திகள் கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் பலி

0

கனடாவில் (Canada) இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் டொராண்டோ – யார்க்வில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 84 வயதான வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம்

தீ விபத்தில் காயமடைந்த குறித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மரணம் 2025 ஆம் ஆண்டில் நகரத்தில் ஏற்பட்ட 15 வது தீ மரணம் என டொராண்டோ தீயணைப்புத் தலைவர் ஜிம் ஜெஸ்ஸோப் தெரிவித்துள்ளார்

இதனிடையே தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை நடைபெற்று வருவதால் வீட்டின் அருகாமையில் காணப்படும் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version