Home இலங்கை அரசியல் ஹரக் கட்டாவுக்காக ஒரு கோடி ரூபாய் செலவு! பாதுகாப்பு பணியில் 87 அதிகாரிகள்

ஹரக் கட்டாவுக்காக ஒரு கோடி ரூபாய் செலவு! பாதுகாப்பு பணியில் 87 அதிகாரிகள்

0

பாதாள உலக தலைவரான ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் நதுன் சிந்தகவின், பாதுகாப்பு செலவுக்கான மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிக பணம் செலவிடப்படுவதா அவரது சட்டத்தரணி உந்துல் பிரேமரத்ன கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் ஹரக் கட்டா தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது சட்டத்தரணி உந்துல் பிரேமரத்ன மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

ஹரக் கட்டா 

இதில் ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் நதுன் சிந்தக தற்போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் எந்த சந்தேக நபரும் இவ்வளவு நீண்ட காலம் காவலில் இருந்ததில்லை. சந்தேக நபருக்காக 87 அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அவரைத் தடுத்து வைக்க மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பொது வரிப் பணம் செலவிடப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version