Home இலங்கை சமூகம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான விபத்துகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான விபத்துகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

சாரதிகளுக்கு கோரிக்கை

அத்துடன் 637 பேர் நிரந்தர உடல்நலப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் செலுத்தும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்….

NO COMMENTS

Exit mobile version