Home இலங்கை குற்றம் பொலநறுவையில் மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை

பொலநறுவையில் மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை

0

பொலநறுவை(Polonnaruwa) – ஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24.04.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளைப் அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/a-fisherman-hacked-death-with-a-sword-polonnaruwa-1713993377

NO COMMENTS

Exit mobile version