கேகாலை – ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று(17.07.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, தெவ்மி அமயா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/a-4-year-old-girl-died-after-falling-into-a-well-1721215943
