Home இலங்கை சமூகம் இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழிகள்: சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் கருத்து

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழிகள்: சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் கருத்து

0

இலங்கையில் 56 மனித புதைகுழிகளில் கொக்குத்தொடுவாயுடன் 21 புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்கள்
மீட்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி
வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் அவரின் பிரசன்னத்துடன்
அகழ்தெடுக்கப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகள் மற்றும் அதனுடனான பிற சான்றுப்பொருட்கள்
பாரப்படுத்தப்பட்டுள்ளன.

திணைக்களங்களின் பங்குபற்றல்

இந்த அகழ்வு பணியானது ஒரு வருடங்களை கடந்து சிலவாரங்கள் நடைபெற்றுள்ளன. மூன்று
கட்டங்களாக இந்த மனித அகழ்வு பணியின் போது 52 மண்டை ஓட்டுத்தொகுதிகள்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. திணைக்களங்களின் பங்குபற்றலுடன் அகழ்வு
பணிகள் நடைபெற்றுள்ளன.

இதற்கான இடைக்கால அறிக்கை போராசிரியர் ராஜ்சோமதேவவினால் தாக்கல்
செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் இவை 1994-1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட எச்சங்களாக
இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பங்குபற்றுனர்களின்
இறுதி அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது. இறப்பிற்கான
காரணம், பால், வயது, உயரம் போன்ற விடயங்கள் இதன்போது உள்ளடக்கப்பட வேண்டும்

அத்துடன், பங்குபற்றிய காணாமல் போன அலுவலக அதிகாரிகளின் அறிக்கை உள்ளிட்டவர்களின்
அறிக்கைகள் அனைத்தும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின்னர்
ஒட்டுமொத்த அறிக்கைகளை வைத்து தீர்மானத்திற்கு வரமுடியும் என்று மன்றின்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

மனித உரிமை மீறல்

இந்த வழக்கு 08.08.2024 திகதி அழைக்கப்பட இருக்கின்றது. இந்த புதைகுழியினை
முற்றுமுழுதாக மூடுவதற்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளின்
பிரசன்னத்தில் மூடவுள்ளது.

அத்துடன், சர்வதேச
நியமனங்களுக்கு அமைவாக இந்த புதைகுழி மூடப்படவேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

இதில் பங்குபற்றியவர்கள் என்ற அடிப்படையில் இது தமிழீழ
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் உடலங்களாக இருக்கலாம் என்று
நம்பப்படுகின்றது. அதிலும் கூடுதலாக பெண் போராளிகளின் உடலங்கள் தான்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதிகமானவர்களின் உடலங்களில் துப்பாக்கி சன்னங்கள்
பாய்ந்துள்ளதை காணக்கக்கூடியதாக உள்ளது. குழிகளுக்குள்ளும் துப்பாக்கி
சன்னங்கள் பாய்ந்துள்ளன. அதனை விட பிற பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற
கட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடைகள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதை
காணக்கூடியதாக இருந்தது. இங்கு ஒரு வன்முறை மற்றும் மனித உரிமை மீறல் நடந்தது என்று அப்பட்டமாக
தெரிகின்றது. ஒட்டுமொத்த அறிக்கைகள் வந்ததன் பின்னர்தான் உண்மை துலங்கும் என்று
எதிர்பாக்கின்றோம். காணாமல் போனோர் சார்பில் தொடர்ந்து இந்த வழக்குகளில் முன்னிலையாகி இருப்போம்.

காபன் பரிசோதனை

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்த அகழ்வு பணிகள் நடைபெறவேண்டும் என்று நாங்கள் திரும்ப திரும்ப கூறிவந்தோம்.

சர்வதேச முறையிலான தொழில்நுட்பவசதிகள் இலங்கையில் இல்லை என்பதை நாங்கள்
எடுத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக பார்த்தோம் என்றால் இதுவரை காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குருதிமாதிரி (DNA) இதுவரை எடுத்து
சேமித்து வைக்கவில்லை இவ்வாறு பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது.

அதனை
நிவர்த்தி செய்துதான் இந்த அறிக்கையினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்
முனைப்பாக இருக்கின்றோம்.

அறிக்கைகளின் பின்னர்தான் சர்வதேச முறைகளுக்கு அமைவாக இந்த அறிக்கைகள் வந்ததா
என்பதை பார்க்கக்கூடியதாக இருக்கும் அந்தந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்தான்
அதனை கூறமுடியும்.
இதுவரை இலங்கையில் 56 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியுடன் 21 புதைகுழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன
இன்னும் புதைகுழிகள் இல்லை என்று நாம் சொல்லவரவில்லை.

காபன் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளதாக என்று கேட்டதற்கு இதுவரை அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version