Home இலங்கை சமூகம் தனியாருக்கு வழங்கப்படவுள்ள மில்கோ நிறுவனம்: மட்டக்களப்பில் போராட்டம்

தனியாருக்கு வழங்கப்படவுள்ள மில்கோ நிறுவனம்: மட்டக்களப்பில் போராட்டம்

0

மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்க வேண்டாம் என தெரிவித்து மட்டக்களப்பு (Batticaloa) பால்
பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் செவ்வாய்கிழமை (16.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதலில் மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த பால் பண்ணையாளர்கள் பால் சேகரிப்பு நிலையத்திலிருந்து, பால் கொள்கலன்களுடன்,
அருகிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னால் ஒன்றுகூடி தேங்காய் உடைத்து,
கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். 

போராட்டம் தொடரும்

இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு
நாம் பாலை வழங்கி கொண்டு வருகிறோம். அதனால் எமக்கு இதுவரையில் எதுவித
இடர்பாடுகளும் இல்லை.

எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய
கொடுப்பனவு வழங்குகிறது. மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல், மரணச் செலவு,
திருமணச்செலவு, உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை
நல்கி வருகின்றனர். எனவே, இவ்வாறான நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நாம்
முற்றாக எதிர்க்கிறோம். 

எனவே, இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை
தனியாருக்கு வழங்குவதை நிறுத்தாவிட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும் என கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version