Home இலங்கை சமூகம் இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு கடற்படையினரிடம் சிக்கியது

இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு கடற்படையினரிடம் சிக்கியது

0

இந்தியாவில்
இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு மன்னார் கடற்பரப்பில்
கடற்படையினரிடம் சிக்கியுள்ளது.

இதன்போது அந்தப் படகில் இருந்த இலங்கையர்
உட்பட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள்

இந்தியாவின் இராமேஸ்வர் தனுஸ்கோடியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும்,
இலங்கையின் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவருமே கடற்படையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பயணம் தொடர்பில் பெரும் சந்தேகம்
காணப்படுவதால் அவர்களைக் கடற்படையினர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தி
வருகின்றனர்.

நீதிமன்றில் முன்னிலை

விசாரணையின் பின்னர் இன்று மன்னார் பொலிஸார் ஊடாக அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version