Home முக்கியச் செய்திகள் ஐ.தே.க தலைமையகத்தில் வெளியேறியது ‘யானை’ உள்நுழைந்தது ‘எரிவாயு’

ஐ.தே.க தலைமையகத்தில் வெளியேறியது ‘யானை’ உள்நுழைந்தது ‘எரிவாயு’

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி(unp) தலைமையகமான சிறிகொத்தாவில் இதுவரைகாலமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த யானை சின்னத்துக்கு பதிலாக தற்போது ‘எரிவாயு’ சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சி தலைமையக அலுவலகத்துக்கு முன்பாக கட்சியின் ஸ்தாபக தலைவர் டிஸ்.எஸ் சேனநாயக்கவின்(DS Senanayake) படம், தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) படத்திற்கு இடையில் யானை சின்னம் காணப்பட்டுவந்தது.

யானை இருந்த இடத்தில் எரிவாயு சின்னம்

எனினும், தற்போது யானை இருந்த இடத்தில் எரிவாயு சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யானை சின்னம் மறைக்கப்பட்டமை தொடர்பில் ஐதேக ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், இது தற்காலிக ஏற்பாடு மாத்திரமே என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு சின்னத்தில் களமிறங்கியுள்ள ரணில் 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சின்னத்தில் ரணில் விக்ரமசிங்க களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version