Home இலங்கை குற்றம் கொழும்பில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்!

கொழும்பில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்!

0

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்பு

முச்சக்கரவண்டிக்குள் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

விசாரணை

குறித்த நபரிடம் வினவியபோது, ​​முச்சக்கரவண்டியை 33 வயதுடைய தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  

Source: https://tamilwin.com/article/a-dead-body-was-recovered-from-the-tricycle-1721698482

NO COMMENTS

Exit mobile version