Home இலங்கை சமூகம் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

0

இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

யாழில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

சம்பள முரண்பாடு

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி குறித்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகையினால் எந்தவித அச்சமும் இல்லாமல் அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமிடத்து நிச்சயம் அதற்கு எதிரான நடவடிக்கைகளை ஆசிரியர் சங்கம் எடுக்கும்“ என தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/ceylon-teachers-union-will-be-engage-strike-1719137352

NO COMMENTS

Exit mobile version