Home இலங்கை அரசியல் விதியின் நகைச்சுவை : நொந்து பேசும் முன்னாள் விவசாய அமைச்சர்

விதியின் நகைச்சுவை : நொந்து பேசும் முன்னாள் விவசாய அமைச்சர்

0

தான் செய்ய நினைத்த அனைத்து வேலைகளையும் அவமதித்து எதிர்த்தவர்கள், தடுத்து நிறுத்தியவர்கள் இன்று அவமானங்களை அனுபவிக்க நேரிட்டது விதியின் நகைச்சுவை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (mahinda amaraweera)கவலையுடன் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு வரும் குரங்குகள் மற்றும் அணில்கள் தொடர்பாக அநுர அரசு கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலை 8 மணிக்கு எந்த ஒரு குரங்கும் வீடுகளுக்கு வருவதில்லை

காலை 8 மணிக்கு எந்த ஒரு குரங்கும் வீடுகளுக்கு வருவதில்லை என்றும், இரவு 12 மணிக்கு இந்த தொகை கணக்கெடுப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் இந்த கணக்கெடுப்பில் அறிவியல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியில் நாட்டில் பெருமளவிலான குரங்குகள், வௌவால்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனது திட்டத்தை நாசப்படுத்தியவர்கள் 

சீன விலங்கியல் பூங்காக்களுக்கு குரங்குகளை வழங்க தாம் கொண்டு வந்த திட்டத்திற்கு வழக்குத் தொடரப்பட்டு நாசப்படுத்தியவர்களே, மீண்டும் அதையே நடைமுறைப்படுத்தப்படுத்துவதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version